JAVA - Step 3
படி 3 - OOP என்றால் என்ன ? Object Oriented Programming என்பதின் சுருக்கமே OOP. இதை "ஓ ஓ பி" என்று கூறுவதே முறையாகும். ஆனால் பெரும்பாலோர் இதை "ஊப்" என்றே கூறிவருகிறார்கள். இது தவறானது. பள்ளி மேல்நிலை புத்தகத்தில் கூறியிருந்தாலும் தவறானதே. ( இது போலத்தான் SAP என்பதை நாம் ஸாப் என்றே கூறி வருகிறோம். அனால் சரியான முறை "எஸ் ஏ பி" என்பதுதான்.) OOP க்கு முன்னால் வழக்கிலிருந்த முறை procedural programming எனப்படும். BASIC, FORTRAN, COBOL மற்றும் C மொழிகள் இந்த முறையை சார்ந்தவையே. இந்த இரண்டு முறைகளுக்கும் என்ன வேறுபாடு என்பதற்கு பல எடுத்துக்காட்டுகளை பல பேர் பல முறை சொல்லியகிவிட்டது. ஆனாலும் மரபு கருதி நானும் சில உதாரணங்களை இங்கே கொடுக்கப்போகிறேன். நீங்கள் ஒரு பொதுத்தேர்வோ அரசாங்கத்தேர்வோ எழுதப்போவதாக வைத்துக்கொள்வோம். முதலில் உங்களுக்கு ஒரு அனுமதிச்சீட்டு வழங்கப்படும். அதில் ஒரு எண் குறிப்பிடப்பட்டு இருக்கும். தேர்வு நடக்கும் இடத்துக்கு நீங்கள் சென்றவுடன் நீங்கள் என்ன செய்வீர்கள்? தேர்வு மையத்தில் இருக்கும் அறிவுப்புப் பலகையை சென்று பார்ப்பீர்கள்...