Java - Step 2

படி 2 - எக்லிப்ஸ் இன்ஸ்டால் செய்ய


ஜாவா ப்ரோக்ராம்களை எழுத முக்கால்வாசி மாணவர்கள் நோட்பாட் எனும் எடிட்டரை பயன் படுத்துகிறார்கள். இதில் எழுதும்போது சின்டாக்ஸ் தவறுகள் அதிகம் வரும். அதிகமான நேரம் வீணாகிவிடும்.

எக்லிப்ஸ் (Eclipse) மற்றும் நெட்பீன்ஸ் (Netbeans) போன்ற மென்பொருள்கள் IDE ( Integrated Development Environment) க்கள் என்று அழைக்கப்படுகின்றன. 

இதில் ப்ரோக்ராம்களை எழுதும்போது நேரம் வீணாவதில்லை. முக்கல்வாசி சின்டாக்ஸ் தவறுகளை ப்ரோக்ராம் எழுதும்போதே திருத்திக்கொள்ள முடியும். ஆனால் உங்கள் தேர்வுகளில் கேட்கும் கேள்விகளுக்கு உங்களுக்கு பதில் தெரியாமல் போய்விடக்கூடிய சந்தர்ப்பம் உண்டு. 

ஏனென்றால் தேர்வுகளில் முக்கால்வாசி கேள்விகள் ஒரு விடுபட்ட எழுத்து (; , :, =) அல்லது ஒரு தவறாக எழுதப்பட்ட வார்த்தை இவற்றை கண்டுபிடிக்க சொல்லி கண் பார்வையை சோதனை செய்ய மட்டுமே உருவாக்கப்பட்டவையாக இருக்கின்றன.

ஆனால் நம்முடைய குறிக்கோள் நல்ல கண் பார்வை பெறுவது அல்ல. எந்த ஒரு சிக்கலை சரி செய்ய நாம் ப்ரோக்ராம் எழுதுகிறோமோ அதிலிருந்து விலகாமல் சின்டாக்ஸ் தவறுகளால் மன உளைச்சலை ஏற்படுதிக்கொள்ளமலும் மிக விரைவாக வேலையே முடிப்பதே.
எனக்கு தெரிந்த வரையில் எக்லிப்ஸ் ஒரு நல்ல IDE.

எக்லிப்ஸ் ஐ பயன்படுத்த முதலில் நீங்கள் அதை டவுன்லோட் செய்ய வேண்டும். நீங்கள் அதற்கு http://www.eclipse.org  என்னும் வலை தளத்திற்கு செல்ல வேண்டும்.





மேற்கண்ட பக்கத்தில் "Downloads" எனும் லிங்கை கிளிக் செய்யவும். கீழேயுள்ள பக்கம் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டியது "Eclipse IDE for Java EE Developers" எனும் பாக்கேஜை. 





உங்களுடைய ஆபரேடிங் சிஸ்டமுக்கு தகுந்தாற்போல பாக்கேஜ்கள் காணப்படும். நான் இங்கு காட்டியுள்ளது Windows 32 Bit வெர்ஷனுக்கானது.
நீங்கள் அதை கிளிக் செய்தவுடன் அடுத்த பக்கத்தில் உங்களுக்கு வெவ்வேறு நாடுகளில் இருக்கும் செர்வர்களில் இருந்து டவுன்லோட் செய்ய முடியும். முதலில் இருக்கும் இடத்தில இருந்து டவுன்லோட் செய்து eclipse-jee-indigo-SR2-win32 .zip file ஐ save செய்து கொள்ளுங்கள். 

இதை unzip செய்ய winzip அல்லது 7zip என்னும் மென்பொருளை பயன்படுத்துங்கள். விண்டோசில் இருக்கும் unzip ஆப்ஷனை (zip file ஐ டபுள் கிளிக் செய்து) பயன்படுத்த வேண்டாம். நான் இதை C:\Software\Eclipse\ எனும் இடத்தில் இதை unzip செய்துள்ளேன்.

இப்போது எழுதப்படும் ப்ரோக்ராம்களை சேமிக்க ஒரு இடத்தை தேர்வு செய்ய வேண்டும். நான் தேர்வு செய்த இடம்C:\Dev\Java\Indigo2 . 

எக்லிப்ஸ் unzip செய்யப்பட இடமான (உங்களுக்கு இது வேறுபடலாம்) 
C:\Software\Eclipse\eclipse-jee-indigo-SR2-win32\eclipse எனும் போல்டருக்கு சென்று eclipse.ini எனும் file ஐ ஒரு Text Editor ல் திறவுங்கள். Notepad ஐ பயன் படுத்தாமல் wordpad ஐ பயன் படுத்தவும். 

eclipse.ini இலிருந்து முதல் 6 வரிகள் மட்டும் இங்கு காட்டப்பட்டுள்ளது.   

-startup
plugins/org.eclipse.equinox.launcher_1.2.0.v20110502.jar
--launcher.library
plugins/org.eclipse.equinox.launcher.win32.win32.x86_1.1.100.v20110502
-product
org.eclipse.epp.package.jee.product


ஐந்தாவது வரியில் நீங்கள் 4 வரிகளை (சிவப்பில் உள்ளது) செருக வேண்டும்.


-startup
plugins/org.eclipse.equinox.launcher_1.2.0.v20110502.jar
--launcher.library
plugins/org.eclipse.equinox.launcher.win32.win32.x86_1.1.100.v20110502
-vm
C:\Software\Java\jdk1.7.0_03/bin/javaw.exe
-data
D:\Dev\Java\Indigo2
-product
org.eclipse.epp.package.jee.product


(-vm) என்பது அதற்கு அடுத்த வரியில் உள்ள எங்கு ஜாவா இன்ஸ்டால் செய்யப்பட்டு javaw.exe உள்ளது என்பதை.
(-data ) என்பது ப்ரோக்ராம்களை சேமிக்கும் இடத்தை குறிப்பது. நான் பயன்படத்தும் இடங்களை இங்கே குறிப்பிட்டுள்ளேன். 

கடைசியாக C:\Software\Eclipse\eclipse-jee-indigo-SR2-win32\eclipse என்ற இடத்தில் உள்ள  eclipse.exe க்கு desktop ல் ஒரு shortcut உருவாக்க வேண்டும்.

இந்த shortcut ஐ டபுள் கிளிக் செய்து எக்லிப்ஸ் மென்பொருளை இயங்கச்செய்யலாம்.




மேலே காணப்படுவது எக்லிப்ஸ் உங்களை வரவேற்கும் ஸ்க்ரீன். இயங்க ஆரம்பித்ததும் நீங்கள் கீழே உள்ள ஸ்க்ரீனை பார்க்கலாம். மேலே வலது மூலையில் உள்ள Workbench (வளைந்த  அம்புக்குறி உள்ள ) ஐகானை கிளிக் செய்யுங்கள். 




கீழே உள்ளதுதான் Workbench. இதுதான் ப்ரோக்ராம்களை எழுதவும் இயங்கச்செய்து சரி பார்க்கவும் பயன்படுகிறது. இதில் மேலே ஒரு மெனு பாரும் அதன்க் கீழே ஒரு தூள் பாரும் உள்ளன. தூள் பாரிலேயே வலது பக்கத்தில் "Java EE" என்ற பட்டன் போன்ற ஒன்று உள்ளது. இது Perspective எனப்படும். இதைப்பற்றி பிறகு சொல்கிறேன்.
இடது பக்கம் "Package Explorer" என்ற விஎவ் உள்ளது. இதில்தான் ப்ராஜெக்ட் மற்றும் ஜாவா ப்ரோக்ராம்கள் லிஸ்ட் செய்யப்படும். 

வலது பக்கத்தில் Outline மற்றும் task list என்ற view கள் உள்ளன. கீழே Markers , Problems போன்ற view  கள் உள்ளன.
இந்த view களை நம் வசதி போல இடம் மாற்றிக்கொள்ள முடியும். நடுவில் காலியாக உள்ளதுதான் எடிட் செய்யும் இடம். 
Outline  view வை package explorer பக்கத்திலும் Task List ஐ கீழேயும் இழுத்து போட்டுவிட்டால் வலது பக்கம் காலியாகி விடும். அதனால் எடிட் செய்யும் இடம் பெரிதாகிவிடும். இது வசதியாகவும் இருக்கும்.




ஒரு ப்ரோக்ராம் எழுத முதலில் ஒரு ப்ராஜெக்ட் உருவாக்க வேண்டும். இதற்கு Project Explorer ல் mouse ஐ வைத்து right பட்டனை கிளிக் செய்ய கீழ்காணும் மெனு கிடைக்கும். 
இதற்கு பதிலாக மேலே உள்ள File மெனுவையும் கிளிக் செய்யலாம்.


நீங்கள் கிளிக் செய்ய வேண்டியது New மெனுவில் உள்ள சப் மெனுவில் உள்ள ப்ராஜெக்ட் எனும் ஆப்ஷனை.  உடன் உங்களுக்கு கீழே உள்ள விசார்ட் ஸ்க்ரீன் கிடைக்கும்.






இதில் உள்ள லிஸ்டில் "Java Project " எனும் ஆப்ஷனை கிளிக் செய்து கீழே உள்ள நேசத் பட்டனை கிளிக் செய்யவும். "New Java Project" எனப்படும் அடுத்த ஸ்க்ரீனில் "Project Name" ஐ கொடுக்கவும். இங்கே அது "Hello" என்று கொடுக்கப்பட்டுள்ளது.





மற்ற ஆப்ஷன்கள் எல்லாம் மேலே உள்ளது போல இருக்கும்படி செய்யவும். இவை எல்லாம் தானாக கிடைப்பவையே. பிறகு "Finish" பட்டனை கிளிக் செய்யவும்.

நாம் தேர்ந்து எடுத்தது "ஜாவா ப்ராஜெக்ட்" எனும் ப்ராஜெக்ட் வகையை. ஆனால் நாம் முதலில் இருந்தது "Java EE" எனும் Perspective. உங்களுக்கு உடனே கீழ்காணும் ஸ்க்ரீன் வரும். இது எக்லிப்ஸ் புதிய Java Perspective ஐ உங்களுக்கு உருவாக்கி தருவதற்காக கேட்கும் அனுமதி. நீங்கள் Remember My Decision என்பதை கிளிக் செய்து Yes பட்டனை கிளிக் செய்யுங்கள்.




இப்போது Hello எனும் ப்ராஜெக்ட் தயாராகிவிட்டது.
View களை இடம் மாற்றிய பிறகு உங்கள் workbench கீழே உள்ளது போல் இருக்கும்.




இப்போது ஒரு ப்ரோக்ராம் எழுத Project Explorer இல் உள்ள src யில் ரைட் கிளிக் செய்யவும். வரும் மெனு ஆப்ஷன்களில் New மற்றும் Class என்பதை செலக்ட் செய்யவும். கீழ்காணும் "New Java Class" ஸ்க்ரீன் கிடைக்கும்.





Package என்ற இடத்தில் com.cn.hello என்று கொடுக்கவும். Name என்ற இடத்தில் Greeter என்று கொடுக்கவும். இதுதான் கிளாஸ் நேம் எனப்படும். 

மற்ற ஆப்ஷன்கள் மேலே உள்ளது போல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். Finish பட்டனை கிளிக் செய்தவுடன் உங்களுக்கு எடிட் View திறக்கும்.






எடிட் View ல் உள்ள Greeter.java வை கீழ்கண்டவாறு மாற்றவும்.

package com.cn.hello;

public class Greeter {

public static void main(String[] args) {
System.out.println("Hello, World");
}

}


இதை Run செய்ய (இயங்கச்செய்ய) Package Explorer இல் இருக்கும் Greeter.java வை ரைட் கிளிக் செய்ய வரும் மெனுவில் "Run As" எனும் ஆப்ஷனை செலக்ட் செய்து பிறகு வரும் மெனுவில் "Java Application" என்பதை கிளிக் செய்யவும்.

கீழே உள்ள Console View வில் இதனுடைய output காணக்கிடைக்கும்.



இதுவரை எல்லாம் ஒழுங்காக நடந்தால் நீங்கள் ஜாவா கற்றுக்கொள்ள தயாராக இருக்கிறீர்கள்.

Comments

Popular posts from this blog

கணினி கலைச் சொற்கள்

தரவுத்தளம் - பகுதி 01

இணையம்