Posts

Showing posts from August, 2015

Dongle Unlock

Image
Dongle ஐ Unlock செய்வது எப்படி என்று பார்ப்போம்!   Dongle ஐ Unlock செய்வதற்கு கடைக்கு சென்றால் , எப்படியும் உங்களிடம் 250 ரூபாய் சேவை கட்டணமாக அரவிடுவார்கள்.அதை நான் இங்கு இலவசமாக சொல்லித்தருகிறேன். இணையச்சேவை வழங்குனர்களின் ( Airtel, Mobitel ,Dialog, Etisalat) Dongle இனை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் பாவிக்க இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.நாம் வேறு ஒரு நிறுவனத்து டை...ய SIM இனை Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code இனை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code இனை எப்படி கண்டுபிடிப்பது ? முதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள்.இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும். இதை http://www.bb5.at/huawei.php?imei *************** அப்படியே Copy செய்து , இதில் இருக்கும் * இற்கு பதிலாக உங்களுடைய IMEI Number யை கொடுத்து Address Bar இல் Paste செய்து கொள்ளுங்கள். இப்போது உங்களுடைய Dongle இற்குறிய Unlock Code கிடைக்கும். அதை அப்படியே Co

JAVA - Step 3

படி 3 - OOP என்றால் என்ன ? Object Oriented Programming என்பதின் சுருக்கமே OOP. இதை "ஓ ஓ பி" என்று கூறுவதே முறையாகும். ஆனால் பெரும்பாலோர் இதை "ஊப்" என்றே கூறிவருகிறார்கள். இது தவறானது. பள்ளி மேல்நிலை புத்தகத்தில் கூறியிருந்தாலும் தவறானதே. ( இது போலத்தான்  SAP என்பதை நாம் ஸாப் என்றே கூறி வருகிறோம். அனால் சரியான முறை "எஸ் ஏ பி" என்பதுதான்.) OOP க்கு முன்னால் வழக்கிலிருந்த முறை procedural programming எனப்படும். BASIC, FORTRAN, COBOL மற்றும் C மொழிகள் இந்த முறையை சார்ந்தவையே.  இந்த இரண்டு முறைகளுக்கும் என்ன வேறுபாடு என்பதற்கு பல எடுத்துக்காட்டுகளை பல பேர் பல முறை சொல்லியகிவிட்டது. ஆனாலும் மரபு கருதி நானும் சில உதாரணங்களை இங்கே கொடுக்கப்போகிறேன். நீங்கள் ஒரு பொதுத்தேர்வோ அரசாங்கத்தேர்வோ எழுதப்போவதாக வைத்துக்கொள்வோம். முதலில் உங்களுக்கு ஒரு அனுமதிச்சீட்டு வழங்கப்படும். அதில் ஒரு எண் குறிப்பிடப்பட்டு இருக்கும். தேர்வு நடக்கும் இடத்துக்கு நீங்கள் சென்றவுடன் நீங்கள் என்ன செய்வீர்கள்? தேர்வு மையத்தில் இருக்கும் அறிவுப்புப்  பலகையை சென்று பார்ப்பீர்கள்

Java - Step 2

Image
படி 2 - எக்லிப்ஸ் இன்ஸ்டால் செய்ய ஜாவா ப்ரோக்ராம்களை எழுத முக்கால்வாசி மாணவர்கள் நோட்பாட் எனும் எடிட்டரை பயன் படுத்துகிறார்கள். இதில் எழுதும்போது சின்டாக்ஸ் தவறுகள் அதிகம் வரும். அதிகமான நேரம் வீணாகிவிடும். எக்லிப்ஸ் (Eclipse) மற்றும் நெட்பீன்ஸ் (Netbeans) போன்ற மென்பொருள்கள் IDE ( Integrated Development Environment) க்கள் என்று அழைக்கப்படுகின்றன.  இதில் ப்ரோக்ராம்களை எழுதும்போது நேரம் வீணாவதில்லை. முக்கல்வாசி சின்டாக்ஸ் தவறுகளை ப்ரோக்ராம் எழுதும்போதே திருத்திக்கொள்ள முடியும். ஆனால் உங்கள் தேர்வுகளில் கேட்கும் கேள்விகளுக்கு உங்களுக்கு பதில் தெரியாமல் போய்விடக்கூடிய சந்தர்ப்பம் உண்டு.  ஏனென்றால் தேர்வுகளில் முக்கால்வாசி கேள்விகள் ஒரு விடுபட்ட எழுத்து (; , :, =) அல்லது ஒரு தவறாக எழுதப்பட்ட வார்த்தை இவற்றை கண்டுபிடிக்க சொல்லி கண் பார்வையை சோதனை செய்ய மட்டுமே உருவாக்கப்பட்டவையாக இருக்கின்றன. ஆனால் நம்முடைய குறிக்கோள் நல்ல கண் பார்வை பெறுவது அல்ல. எந்த ஒரு சிக்கலை சரி செய்ய நாம் ப்ரோக்ராம் எழுதுகிறோமோ அதிலிருந்து விலகாமல் சின்டாக்ஸ் தவறுகளால் மன உளைச்சலை ஏற்படுதிக்கொள