நச்சு நிரல் /வைரஸ்
நச்சு நிரல் /வைரஸ் கணினிக்கு தீங்கிழைக்கக் கூடிய அல்லது செயல்பாட்டை நிறுத்தக்கூடிய மென்பொருட்கள் நச்சுநிரல் எனப்படும் நச்சு நிரல் தானே உருவாகக்கூடியது அல்ல. அவை நன்கு கற்றுக்தேர்ந்த மென்பொருள் வல்லுநர்களால் கெட்ட நோக்கத்திற்காக ( bad aim) உருவாக்கப் பட்டவைகளாகும். வைரஸ் தோற்றிய அறிகுறிகள் 1. கணினியின் வேகம் குறைந்து காணப்படும். மேலும் மென்பொருள் சரிவர இயங்காது. 2. கணினி அடிக்கடி செயலிழந்து போகும் அல்லது தானாகவே மீள்தொடக்க செயல்பாட்டிற்கு உட்படும். 3. ஆவணத்தை சிறந்த முறையில் அச்சிட முடியாது. விளங்காத எழுத்துக்களில் அச்சிடப்படும். 4. புதிது புதிதாக பிழைச் செய்திகள் திரையில் தோன்றும். திடீர் திடிரென தேவையில்லாமல் வினோத ஒலி கேட்கும். 5. கோப்புக்கள் மற்றும் கோப்புறைகள் மறைந்து போகும் அல்லது அனைத்தும் பணிகுறிகளாக ( short-cut ) மாறியிருக்கும். 6. அண்மையில் திறந்த ஆவணங்களுக்கு இரண்டிரண்டு விரிவுகள் தோன்றலாம். 7. ...