தரவுத்தளம் - பகுதி 01



தரவுகளும் தகவல்களும்

தரவுகள்(Data): 
தரவுகள் எனப்படுபவை வகைப்படுத்தப்படாத தகவல்கள் ஆகும்.
உதாரணம்:
                        வயது 38
                        சம்பளம் 1,000  ரூபா
                        5 குழந்தைகள்

தகவல்கள்(Information)
ஒழுங்குபடுத்தப்பட்ட வடிவில் முறையாக வழங்கப்படும் உண்மைகள் அல்லது கருதுகோள்கள் தகவல்கள் எனப்படும்.
அதாவது முறையாக ஒழுங்குபடுத்தப்பட்ட தரவுகள் தகவல்கள் எனப்படும்.
உதாரணம்:
கந்தசாமியின் வயது 38  ஆகும். அவருக்கு 5  குழந்தைகள் இருப்பதால் நாளொன்றுக்கு 1000 ரூபா தேவைப்படுகிறது.
குறிப்பு:
                        தரவுகள் சேகரிக்கப்படுபவை ஆனால் தகவல்கள் உருவாக்கப்படுபவை.

சுட்டுவரிசையாக்கம்(Indexing)
அட்டவணையில் தரவுகளை விரைவாக தேடுவதற்கும் சேமிப்பதற்கும் பயன்படுத்தப்படும் பொறிமுறையாகும்.

உதாரணம்:
1.        பெயரை பயன்படுத்தி தேடும்போது பெயரை அகர வரிசையில் ஒழுங்குபடுத்தி தேடுதல்.
2.        இலக்கங்களைக் கொண்டு தேடும்பொழுது ஏறுவரிசையிலோ அல்லது இறந்குவரிசையிலோ ஒழுங்குபடுத்தி தேடுதல்.

சுட்டுவரிசையாக்க வகைகள்(type of Index)
1.       Single Field Index
ஒரே ஒரு நிரலுக்கு மாத்திரம் செய்யப்படும் சுட்டுவரியையாக்க முறையாகும். பொதுவாக ஒரே ஒரு நிரலை அடிப்படையாக வைத்து தரவுகள் கையாளப்ப்படுமையின் அந்த நிரலுக்கு செய்யப்படும் index ஆனது Single Field Index எனப்படும்.

உதாரணம்:
        அடையாள அட்டை இலக்கத்தை வைத்து கையாளப்படும் தரவுகள்.

2.        Multiple Field Index
தரவுகள் கையாளப்படும் பொது பல நிரல்களை அடிப்படியாக வைத்து கையாளப்ப்டுமாயின் அன் நிரல்களுக்கு செய்யப்படும் index ஆனது Multiple Field Index எனப்படும்.

உதாரணம்:
    முழுப்பெயரை (தந்தையின் பெயர் மற்றும் உரியவரின் பெயர்) வைத்து கையாளப்படும் தரவுகள்.

சாவி நிரல்
எச் சந்தர்ப்பத்திலும் ஒன்றுக்கொன்று சமனற்ற தரவுகளைக் கொண்ட நிரலை கொண்டு எதாவது ஒரு நிரையை தேடி பெற்றுக்கொள்ள முடியுமாயின் அன் நிரல் சாவி நிரல் எனப்படும்.
F  அடையாள அட்டை இலக்கத்தை கொண்ட நிரல்

குறிப்பு:
        சாவி நிரல் ஒருபோதும் தரவற்ற நிரையை கொண்டிருக்க முடியாது.

கையினால் அட்டவணை ஒன்றை அமைக்கும் பொழுது பின்வரும் இடர்பாடுகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.
1.        தரவுகளின் அளவு அதிகரிக்கும்போது அட்டவணையை அமைப்பது சிரமமாகும்.
2.        பதிவுகளின் அளவு அதிகரிக்கும்போது பெரிய அட்டவணையை அமைக்க வேண்டியிருக்கும்.
3.        அட்டவணையை சேமித்து வைக்க பெரிய இடவசதி தேவை?
4.        நீண்டகாலத்துக்கு பாதுகாத்து வைத்தல் சிரமமாகும்.
5.        பதிவை கையாளல்(புதிதாக சேர்த்தல்மாற்றல்நீக்கல்) சிரமமாக இருக்கும்.
6.        குறித்த பதிவொன்றை தேடல் சிரமமாக இருக்கும்.
7.        பதிவை தேவையான முறையில் ஒழுங்குபடுத்தல் சிரமமாக இருக்கும்.
8.        தேவையான பதிவை மாத்திரம் பெறல் கடினமாக இருக்கும்.

தரவுத்தளம் (DATABASE)


1.        தரவுத்தளம் என்பது ஒன்றுடன் ஓன்று தொடரபுடைய ஒழுங்குபடுத்தப்பட்ட தரவுகளின் கோர்வையாகும். இது ஒரு குறித்த நோக்கத்திற்காகவென்று வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள தரவுகளைக் கொண்டு நிரப்பபப்பட்டிருக்கும். மேலும் இது  இயல்பான அர்த்தத்தைக கொடுக்கக் கூடிய ஒன்றுடனொன்ற முரண்பாடு இல்லாத தரவுகளின்   சேர்க்கையாகும். தரவுத்தளமானது நடமுறை உலகின் விடயங்களை பிரதிபலிக்ககூடியதாக இருப்பதனால் சிறிய உலகம்(Mini World) எனவும்    அழைக்கப்படுகின்றது.

தரவுத்தள முறமையோன்று கொண்டிருக்க வேண்டிய பண்புகள்
1.        மிககூடிய அட்டவணைகளை கையாளக்கூடிய வசதி மேலும் அதிக நிரல்களையோ அல்லது நிரைகளையோ உருவாக்கும் வசதி.
2.        இலகுவா நிரல்களையோ அல்லது நிரைகளையோ நீக்கும் அல்லது மெருகூட்டும் வசதி(Delete or Update Rows/Columns).
3.        அட்டவணைகளுகிடையே இலகுவான தொடர்பு வசதியை கொண்டிருக்க வேண்டும் (Referential Integrity Constraints).
4.        தரவு உள்ளீடின் பொழுது தரவின் நிபந்தனைகளை உறுதிப்படுத்தியபின் அட்டவணையில் சேர்ப்பதற்கான வசதி(Check Constraints)
5.        குறித்த வினவலுக்குரிய விடையை விரைவாக தரவேண்டும்(Indexing Facilities).
6.        எவ்வாறான வினவலுக்கும் விடையளிக்ககூடியதாக இருத்தல் வேண்டும்(Complex Query responsibility).
7.        தரவு உள்ளிடு மற்றும் வெளியீட்டில் ஒருவர் விரும்பிய இலகு முறையை பயன்படுத்தக்கூடிய வசதி(preferred format-Forms)
8.        சிறந்த தரவுதள பாதுகாப்பு வசதி(Security)
9.        தரவுகளை தகவல்களாக மாறும்போது விரும்பிய கணித மற்றும் கணக்கியல் செய்கைகளையோ அல்லது விரும்பிய வடிவமைப்பிலோ வெளியிடும் வசதி.(Flexible Report Format)


தரவுத்தள முகாமை முறைமை -  Database Management System (DBMS)
இது தரவுத் தளங்களை உருவாக்குவதற்கும் அவற்றை பராமரிப்பதற்கும் உள்ள செயலோளுங்குகளின் (Programs)சேர்வையாகும்.

பயன்பாடு
வரையறுத்தல்(Define)
இது என்ன வகையான தரவு வகைகள்(Data Type),  கட்டமைப்பு,தரவுத்தளத்தில் தரவினை சேமிப்பதில் உள்ள தடைகள் போன்றவற்றை வரையறை செய்யும்.

நிர்மாணித்தல்(Construct)
தரவுத்தளமானது சேமிப்பகத்தில் சேமித்து வைப்பதற்காக என்ன வகையான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்பதனை குறிக்கும்.

கணிப்பீடுகள்(Manipulation)
தரவுத்தளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தரவுகளை பெற்றுக் கொள்ளல், வெளியுலக மாற்றங்களை பிரதிபலிக்கத்தகதாக தரவுத்தளத்தை பதிவேற்றம் செய்தல்(Update) தரவுகளைசேர்த்தல் அல்லது நீக்கல் மற்றும் தரவுத்தளத்தில் இருந்து தேவையான அறிக்கைகளை பெற்றுக் கொள்ளல் போன்ற விடயங்களை இது குறிக்கும்.

தரவுத்தள முகாமை முறைமை பயன்பாடு
1.        தரவு அட்டவணைகளை எளிதாக அமைக்கலாம் (Create Tables)
2.        மிகக் கூடுதலான  அளவு தரவுகளை சேமித்து வைக்கலாம்.(Store More Data)
3.        மிகக் குறுகிய நேரத்தில் தரவுகளை பெறலாம்(Less Access Time)
4.        கூடுதல்  பாதுகாப்பு(High Security)
5.        பதிவை மறுபடியும் சேர்த்தல் (Add Records) அல்லது புதிதாக புலத்தைச் சேர்த்தல்
6.        மிக எளிதாக பதிவை நீக்கலாம்(Delete Records)
7.        மிக எளிதாக பதிவை மேம்படுத்தல்(Update Records)
8.        மிக எளிதாக பதிவை தேடலாம் (Search Records)
9.        மிக எளிதாக பதிவை வரிசையாக்கம் செய்யலாம்(Sort Records)
10.     மிக எளிதாக பதிவை வடிகட்டல் செய்யலாம்(Filter Records)

சிறந்த தரவுத்தள வடிவமைப்பு
1.        தரவுத்தளமானது மிகையற்ற (தேவையான) தரவுகளை கொண்ட தேவையான அட்டவணைகள் மூலம் உருவாகப்படிருக்கும்.
2.        அட்டவணைகளை இலகுவாக தொடர்புபடுத்தி எமக்கு தேவையான தகவல்களை பெறக்கூடியதாக இருத்தல் வேண்டும்.
3.        பெறப்படும் தகவல்கள் திருத்தமாகவும் உண்மைத்தன்மை உடையவையாகவும் இருத்தல் வேண்டும்.
4.        தேவையான அறிக்கைகளை பெறக்கூடிய தரவுகளை கொண்டிருக்க வேண்டும்


சிறந்த தரவுத்தளத்தை வடிவமைப்பதற்கான படிமுறைகள்
1.        தரவுத்தளத்தின் நோக்கத்தை சரியாக அடையாளம் காணல்
2.        தேவையான தகவல்களை அடையாளம் கண்டு ஒழுங்கமைத்தல்
3.        சேமிக்கப்பட வேண்டிய தகவல்களுக்குரிய தரவுகளை இனம்கண்டு அதற்குரிய அட்டவணைகளை இனம்காணல்.
4.        அட்டவணைக்குரிய நிரல்களை இனம் காணல் (
5.        முதன்மை சாவிகளை இனம் காணல் (Primary Key)
6.        அட்டவணைகளுக்கிடையே பொருத்தமான தொடர்புகளை உருவாக்கல் (Referential Integrity)
7.        தரவுத்தளத்தின் நிபந்தனைகள், கட்டுப்பாடுகளை சரிபார்த்து பிழைகளை திருத்துதல் (Integrity Constraints)
8.        அட்டவணைகளை தரவு இயல்பாக்கத்துக்கு (Data Normalization) உட்படுத்துதல்.

உறவு முறை தரவுத்தளம் (Relational Database)
தகவல்களானது மிகச்சிறந்த தரவுகளாக ஒழுங்கமைக்கப்பட்டு அட்டவணைகளில் நிரல்களாகவும் நிரைகளாகவும் சேமிக்கப்படும். இவ் அட்டவணைகள் பொருத்தமான தொடர்போன்றினால் இணைக்கப்பட்டு பரமரிக்க்கப்ப்டும். மேலும் இத்தரவுத்தளமானது நிரல் ஒருமைப்பாடு (Column Integrity), மேற்கோளிட்ட ஒருமைப்பாடு (Referential Integrity)போன்ற கட்டுப்பாடுகளை (Constraintsகொண்டிருக்கும். ஒரு தரவானது நீக்கப்படும்போது அல்லது மேம்படுத்தப்படும்போது அதன் விளைவு தொடர்புபட்ட அனைத்து அட்டவணைகளிலும் பிரதிபலிக்கும்.

அட்டவணைகளின் அடிப்படை தரவு கட்டமைப்பு பின்வரும் பண்புகளை கொண்டிருக்கும்.
1.        நிரைகளின்(row) ஒழுங்கானது முக்கியமான ஒன்டறல்ல.
2.        ஒரு அட்டவணையில் ஒரே பெறுமதியான நிரைகள்(column)அனுமதிக்கப்படமாட்டாது.
3.        ஓவ்வொரு நிரையும்  ஒவ்வொரு நிரல்கள் சாவிக்களான (Column Key) ஒற்றைப் பெறுமதியை(Atomic Value)கொண்டிருக்கும்.

உறவு முறை மாதிரியின் பிரதான பண்புகள்
1.        இந்த தரவுத்தளத்தில் உள்ள ஓவ்வொரு அட்டவணையும் தனித்துவமான பெயர்களை கொண்டிருக்கும்.
2.        ஒரு நிரை,  நிரல் சந்திக்கும் இடத்தில் உள்ள தரவுப் பெறுமானமானது ஒரு தனி ஒற்றை (Unique) பெறுமானமாக இருக்கும்.
3.        பல பெறுமானங்களை கொண்ட பண்பு (attribute)இருக்காது.
4.        ஓவ்வொரு நிரையும் தனித்துவமானது.
5.        ஒரு அட்டவணையில் உள்ள அந்த இரண்டு நிரைகளும் ஒரே மாதிரியானதல்ல.
6.        அட்டவணையில் உள்ள ஓவ்வொரு நிரல் தனித்துவமான பெயரை கொண்டுள்ளது.
7.        வரிசை முறை நிரை அதாவது இடமிருந்து வலம் என்பது முக்கியமற்றது.
8.        ஒரு அட்டவணையில் உள்ள நிரல்இ அட்டவணையில் கருத்தை or  பயனை மாற்றாது இடம் மாற்றிக்கொள்ள முடியும்
9.        வரிசை முறை அதாவது மேலிருந்து கீழ் நோக்கி என்பதும் முக்கியமற்றது
10.     ஒரு அட்டவணையில் உள்ள நிரையை இடம் மாற்றவோ or ஏதாவது வரிசை முறையிலோ அமைத்துக்கொள்ளலாம்.

அட்டவணை or உறவு (Relation / Table)
F  பெயரிடப்பட்ட இருபரிமாணம் கொண்ட தரவு அட்டவணை.
F  Table ஆனது relation (உறவு) எனவும் அழைக்கப்படும்.


நிரல் 1
நிரல் 2
நிரல் 3
நிரல் 4
நிரல் 5
நிரை 1





நிரை 2





நிரை 3





நிரை 5







இந்த அட்டவணையானது(Table)நிரைகளையும் நிலையான எண்ணிக்கையுடைய பெயரிடப்பட்ட நிரல்களையும் கொண்டிருக்கும்


நிரல் (Column)
இந்த பண்புகள் ஒரு குறித்த பொருளை விபரிக்க பயன்படும். ஒவ்வொரு நிரலும் தனித்துவமான பெயரையும் ஒரு தரவு வகுதியையும் (data type) கொண்டிருக்கும்.

நிரலினுடைய தலைப்பு பண்பு (Attribute) எனவும் அழைக்கப்படும்.

Table: Employee

நிரல் 1
நிரல் 2
நிரல் 3

Name
Designation
Department
நிரை 1
Kalai
ICT Officer
ICT Unit
நிரை 2
Thaya
Commissioner
Land Dept.
நிரை 3
Thara
DO
Land Dept.

நிரை (Row)
1.        நிரைகளின் பதிவுகள் (records) அது குறித்த பொருளின் நிகழ்வினை குறிக்கும்.
2.        இது tuple எனவும் அழைக்கப்படும்.

Tuple
நிரை 2
Thaya
Commissioner
Land Dept.

உறவு முறை தரவுத்தள முகாமை முறைமையின் நன்மைகள்
1.        மிகையினை கட்டுப்படுத்தல (Controlling redundancy)
பாரம்பரிய கோப்பு  முறைமையில் ஒரே தரவானது பல தடவைகள் பதியப்படும்
இங்கு கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால்
F  சேமிப்பகம் வீணாதல் தடுக்கப்படுகிறது
F  தேவையற்று தரவு மடங்காதல் தடுக்கப்படுகிறது
2.        அனுமதியில்லாத நுழைவை கட்டுப்படுத்தல் (Restricting unauthorized Access)
பல பாவனையாளர்களை கொண்டுள்ள பெரிய தரவுத்தளங்களில் பாவனையாளரை கட்டுப்படுத்துகிறது. இதனால்
F  அனுமதியற்ற பாவனை
F  தவறான பாவனை மற்றும் தவறாக கையாளுதல் கட்டுப்படுத்தப்படுகிறது.

முதன்மை சாவி
அட்டவணை ஒன்றில் ஓர் நிரலானது கொண்டுள்ள ஓர் தரவை பயன்படுத்தி அதனுடைய நிரையை தனித்துவமாக அடைய மிகப்பொருத்தமாக இருப்பின் அத்தரவனது முதன்மை சாவி எனப்படும்.

Index No.
Name
EB
FR
Com. Test
30101
Thaya
39
41
32
30127
Thara
43
46
52
30213
Siva
37
18
50
30218
Kalai
41
29
46
30229
Siva
40
41
61
30257
Thaya
43
40
47
30263
Kalai
19
39
52
 உதாரணம்:
                அடையாள அட்டை இலக்கம்.
                மாணவர் சுட்டேண்
                மாணவர் பதிவிலக்கம்.



குறிப்பு:
1.        முதன்மை சாவி நிரலானது தானியங்கு (Automatic ஆக) முறையில்  index  செய்யப்படும்.
2.        ஓர் அட்டவணையானது ஒன்றுக்கு மேற்பட்ட முதன்மைச் சாவிகளை கொண்டிருக்க முடியாது. அனால் ஒன்றுக்கு மேற்பட்ட நிரல்களை ஒரு முதன்மை சாவி கொண்டிருக்க முடியும்.

பயிற்சி வினா:
MS Access அட்டவணையோன்றின் முதன்மை ஆளி (Primary Key)என்பதால் அறியப்படுவது யாது? PMA III 2008 (I) (2009)

மேற்கோளிடும் சாவி (Foreign Key)
உறவு முறை தரவுத்தள மாதிரியில் மிக முக்கியமான சாவி இதுவாகும்.

இரண்டு அட்டவணைகளில் ஒன்றில் உள்ள நிரலில் தரவிடும்போழுது அது மற்றைய அட்டவணையின் முதன்மை சாவி நிரலை பரிசிலிக்குமாயின் இன் நிரலானது மேற்கோளிடும் சாவி எனப்படும்.

ஓர் அட்டவணை ஒன்றிற்கு மேற்பட்ட மேற்கோளிடும் சாவிகளை கொண்டிருக்கலாம்.


உதாரணம்:
        அட்டவணை மற்றும் 2 இல் உத்தியோகத்தர் தொடர் இலக்கம்.
        அட்டவணை மற்றும் 3 இல் உத்தியோகத்தர் பதவி இலக்கம்.
அட்டவணை 01
அட்டவணை 03
அட்டவணை 02

தே. அ. இ.
பெயர்
பால்
வயது
721021130V
கலை
ஆண்
42
756103714V
தாரா
பெண்
39
945743910V
நயனி
பெண்
20
621457101V
சிவா
ஆண்
52
921535129V
கயன்
ஆண்
22

தொ. இ.
தே. அ. இ.
ப. இ.
திருமணம்
EMP001
721021130V
JOB001
ஆம்
EMP002
756103714V
JOB002
ஆம்
EMP003
621457101V
JOB003
ஆம்
EMP005
945743910V
JOB001
இல்லை
ப.. இ.
தொழில்
வரு.
JOB001
விவசாயம்
20,000
JOB002
வைத்தியர்
50,000
JOB003
ஆசிரியர்
25,000

Comments

Popular posts from this blog

கணினி கலைச் சொற்கள்

பொது உளச்சார்பு / நுண்ணறிவு & கிரகித்தல் தமிழ் புத்தகங்கள்