Computer Knowledge

கணினியில் கோப்புறையை மறைத்தல்


  1. கோப்புறையின்(Folder) மீது சுட்டிக்குறியை(Cursor) வைத்து சுட்டியின் (Mouse) வலப்பக்க பொத்தானை (Right Button) அழுத்துங்கள்.
  2. புதிதாக தோன்றும் பட்டியலில் பண்புகள்(Properties) என்பதை தெரிவுசெய்யவும். பண்புகள் என்ற தலையங்கத்துடனான விருப்ப தெரிவுப் பெட்டியொன்று (Option Box) தோன்றும்.
  3. புதிதாக தோன்றிய விருப்ப தெரிவுப் பெட்டியில் பொது(General), பகிர்(Sharing), பாதுகாப்பு(Security), முன்னைய பதிப்பு(Previous version), மற்றும் தனிப்பயனாக்கு (Customize) என்ற வரிசையில் தாவல்கள்(Tabs) இருக்கும். அதில் தனிப்பயனாக்கு(Customize) என்ற தாவலை தெரிவுசெய்க.
  4.  அதில் கோப்புறை வரைகலை (Folder Icon) குறியீடு என்ற தலையங்கத்துடான குழுவில் வரைகலை குறியீட்டை மாற்று (Change Icon) என்ற பொத்தானில் (Button) அழுத்துக.
  5. பல வரைகலை குறியீடுகளை கொண்ட தாவல் தோன்றும். அவற்றின் கிழே கிடையான உருள்பட்டியை (Horizontal Scroll bar) அங்கும் இங்கும் அசைப்பதன் மூலம் மூன்று வெற்றிடத்தை (Empty Space) கொண்ட பகுதியை கண்டுபிடித்து அவற்றில் ஒன்றை தெரிவுசெய்து சரி (OK) என்ற பொத்தானை அழுத்துக.
  6. கோப்புறையானது தற்போழுது வரைகலை குறியீடு இல்லாமல் தனிப் பெயருடன் மட்டும் தோன்றும். அதனை தெரிவுசெய்து விசைபலகையில் (Keyboard) F2 என்ற விசையை அழுத்துவும்.
  7. தொடர்ந்து விசைப்பலகையில் அழிப்பதற்குரிய Delete என்ற விசையை அழுத்தவும்.
  8. மீண்டும் விசைபலகையில் alt என்ற விசையை அழுத்தியபடி 0160 என்ற இலக்கத்தை பதிவுசெய்து உள்வழிச்சாவியை (Enter Key) அழுத்துக. இப்பொழுது கோப்புறையின் பெயரும் மறைந்திருக்கும். மேற்படி இலக்கத்தை பதிவுசெய்யும் பொழுது அது திரையில் தோன்றாது என்பதை கவனிக்கவும். அத்துடன் மேற்படி இலக்கத்துக்கு பதிலாக 255 என்ற இலக்கத்தையும் உள்ளீடு செய்யலாம்.
  9. விசைப்பலகையில் F5 என்ற விசையை அழுத்தும்போழுது கோப்புறை தோன்றிமறையும். மற்றப்படி தெரியாது


Comments

Popular posts from this blog

தரவுத்தளம் - பகுதி 01

கணினி கலைச் சொற்கள்

பொது உளச்சார்பு / நுண்ணறிவு & கிரகித்தல் தமிழ் புத்தகங்கள்