மின்னஞ்சல்

மின்னஞ்சல்




மின்னஞ்சல்
மின்னஞ்சல் என்பது இணையத்தை பயன்படுத்தி தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் செய்திகளை எழுதுதல்அனுப்புதல்மற்றும் பெறுதல் போன்றவற்றைச் செய்யும் முறையாகும். சாதாரணமாக அஞ்சல்கள் அனுப்பும் போது யாரிடமிருந்து யாரிற்கு அனுப்புவதைப் போன்று இங்கும் அனுப்புவபரின் மின்னஞ்சல் முகவரியும் பெறுபவரின் மின்னஞ்சல் முகவரியும் தேவைப் படுகின்றது.

சாதாரண கடித போக்குவரத்துடன் ஒப்புடுகையில் மின்னஞ்சலின் அனுகூலங்கள்:
  1. விரைவானது மற்றும் செலவு குறைந்தது
  2. ஒலிகள் மற்றும் காணொளிகளை இணைக்க முடியும்
  3. பல வர்ண அல்லது வர்ண புகைப்படங்களை அனுப்ப முடியும்.
  4. ஒரே நேரத்தில் பலருக்கு அனுப்ப முடியும்.
  5. பாதுகாப்பானது. குறிப்பிட்ட ஒருவருக்கு அனுப்ப முடியும்.
  6. அனுப்பும் இடம் மற்றும் பெறும் இடம் முக்கியமில்லை.

மின்னஞ்சல் சேவை வழங்குநர்கள்
மின்னஞ்சல் சேவையைப் பல்வேறு நிறுவனங்கள் இலவசமாக வழங்கி வருகின்றன.
1.        ஜீமெயில் - கூகுள் நிறுவனம் - www.gmail.com
2.        ஹாட்மெயில் - மைக்ரோசாஃப்ட் நிறுவனம் -www.hotmail.com
3.        யாகூமெயில் - யாகூ நிறுவனம் - www.yahoomail.com
4.        ஏஓஎல்மெயில் - அமெரிக்கா ஆன்லைன் - www.aol.com
5.        ரீடிஃப்மெயில் - ரீடிஃப் நிறுவனம் - www.rediffmail.com

மின்னஞ்சல் முகவரியோன்றை உருவாக்கும் படிமுறைகள்:
1.        குறித்த மின்னஞ்சல் சேவை நிறுவனத்தின் முகப்பு பக்கத்தை உலாவியை பயன்படுத்தி திறக்க.
2.        மின்னஞ்சல் சேவைக்குரிய பக்கத்துக்கு செல்லல்
3.        ஒரு மின்னஞ்சல் கணக்கை உருவாக்க ‘ஒப்பமிடல்’ (Sign Up)என்ற இணைப்பை அழுத்தவும்.
4.        பெயர்வயதுமுகவரிபிறந்த நாள்பணிதொலைபேசி எண் போன்ற சில விவரங்களை ஒரு படிவத்தில் நிறைவு செய்து சமர்ப்பித்தால் ஒரு மின்னஞ்சல் முகவரி (email address)கிடைக்கும்.
      i. முகவரிக்காக தேர்வு செய்யும் பெயர் மற்றும் சேவையை வழங்கும் நிறுவனத்தின் வலையகப் பெயரையும் கொண்டதாக இருக்கும். narakaselvan@gmail.comஎன்பதுபோல அம்முகவரி அமையும்.
           ii.      தேர்வுசெய்யும் பெயரில் ஏற்கெனவே ஒருவர் முகவரி பெற்றிருந்தால் வேறு பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும்.
5.        மீண்டும் குறித்த மின்னஞ்சல் சேவை நிறுவனத்தின் முகப்பு பக்கத்துக்கு சென்று மின்னஞ்சல் சேவைக்குரிய பக்கத்துக்கு செல்லல்.
6.        மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பயன்படுத்தி மின்னஞ்சல் சேவையை பெறலாம்.


மின்னஞ்சல் முகவரி
இலவச மின்னஞ்சல் முகவரியானது பின்வரும் வடிவமைப்பில் காணப்படும்.
மின்னஞ்சல் வழங்குனர்கள் விருப்பதெரிவு
பயனாளர் விருப்பதெரிவு
                                            razith123@gmail.com
மின்னஞ்சல் முகவரியை அடையாளம் காண விசேட குறியீடு @''
உச்சரிப்பு “at
  
மின்னஞ்சல் முகவரியில் பயனர் விருப்ப தெரிவானது மற்றவர்களால் இலகுவில் ஞாபகம் வைத்திருக்க கூடியவாறு கூடியளவு சிறியதாகவும் பொருத்தமானதாகவும் இருத்தல் வேண்டும்.
மின்னஞ்சல் கணக்கின் பகுதிகள்
1.        Inbox
குறித்த முகவரிக்கு வரும் மின்னஞ்சல் இங்கு சேமிக்கப்படும்.. வாசிக்கப்படாத மின்னஞ்சல்கள் தடித்த எழுத்திலும் மற்றவை மெல்லிய எழுத்திலும் காணப்படும். மேலும் வாசிக்கப்படாத மின்னஞ்சல்களின் எண்ணிக்கையானது Inbox என்ற சொல்லை தொடர்ந்து அடைப்புக்குறிக்குள் கண்பிகப்படும்.
உதாரணம்: Inbox (18)

2.        Compose /New
ஒருவருக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்புவதற்கு இது பயன்படும். இது பின்வரும் உட்பிரிவுகளை கொண்டது.
               i.      To
மின்னஞ்சல் யாருக்கு அனுப்பபடவேண்டுமோ அவரின் மின்னஞ்சல் இங்கு கொடுக்கப்படவேண்டும்.
பலருக்கு ஒரே மின்னஞ்சலை அனுப்பவேண்டுமாயின் இதற்குள் எல்லோருடைய மின்னஞ்சலையும் cama (“,”) ஐ பயன்படுத்தி வேறுபடுத்தியவாறு இடல் வேண்டும்.

             ii.      CC(Carban Copy)
இதில் யாருக்காவது மின்னஞ்சலின் பிரதி அனுப்பவேண்டுமாயின் அவரின் மின்னஞ்சல் முகவரி இங்கு இடப்படல் வேண்டும்.
இது அரச அலுவலக கடிதங்களில் பயன்படுத்தப்படும் “Copy to:”போன்றது.
இவருக்கும் மின்னஞ்சல் பிரதி அனுப்பப்படுவது பிரதானமாக மின்னஞ்சல் பெறுநருக்கு தெரியவரும்.
           iii.      BCC(Blind Carbon Copy)
இதில் யாருக்காவது மின்னஞ்சலின் பிரதி அனுப்பவேண்டுமாயின் அவரின் மின்னஞ்சல் முகவரி இங்கு இடப்படல் வேண்டும்.
இவருக்கும் மின்னஞ்சல் பிரதி அனுப்பப்படுவது பிரதானமாக மின்னஞ்சல் பெறுநருக்கு தெரியவராது.

குறிப்பு:
To இலோ CC இலோ இடப்படும் மின்னஞ்சல் முகவரிகள் பெறுனர் அனைவருக்கும் தெரிய வரும். அனால் BCC இல் இடப்படும் மின்னஞ்சல் முகவரிகள் ஏனைய பெறுனர்களுக்கு தெரிய வராது.

           iv.      Subject
அனுப்பப்படும் மின்னஞ்சலின் நோக்கத்தை தெளிவுபடுத்தும் பகுதியாகும்.
மின்னஞ்சலின் சாராம்சத்தை ஒட்டியதாகவும் பெறுனரை இலகுவாக அறியக்கூடியதாககவும் இருக்கக்கூடிய ஒரு தலைப்பினை இங்கு இடல் வேண்டும்.
             v.      Body
மின்னஞ்சலின் பிரதானமான பகுதி இதுவாகும்.
சாதாரண கடிதம் போன்று இங்கு மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய விடையத்தை இங்கு இடல் வேணும்.
சொல்லாடல் மென்பொருளில் செய்யக்கூடிய எழுத்துப்பிழை மற்றும் இலக்கணப்பிழை போன்ற அடிப்படை வடிவமைப்புக்களை இங்கும் செய்யலாம்..
           vi.      Attach Files
இம் மின்னஞ்சலுடன் வேறு எதாவது புகைப்படம், காணொளிமற்றும் குரல் செய்திகள் மற்றும் அழைப்பிதழல்கள் போன்றவற்றை இணைக்கலாம்.
பொதுவாக ஆகக்கூடியது 25 MB கொள்ளளவுடைய கோப்புக்களையே இணைக்க முடியும்.

3.        Send Mail
இம் மின்னஞ்சல் முகவரியினால் அனுப்பப்படும் மின்னஞ்சல்களின் பிரதியொன்று இங்கு பாதுகாக்கப்படும்.
இம் மின்னஞ்சல் மூலம் யார்யாருக்கு மின்னஞ்சல்கள் அனுப்பபட்டுள்ளது என்பதனை Send Box என்ற கோப்புறைக்கு செல்வதன் மூலம் அறியலாம்.
.

4.        Trash
எம்மால் தேவையற்றதென அல்லது தவறுதலாக நீக்கப்படும் மின்னஞ்சல் இங்கு சேமிக்கப்படும்.
Windows இயக்க முறைமையில் காணப்படும் மீள்சுற்ரோட்ட கொள்கலம் (Recylebin) போன்றது.
இங்கிருந்தும் நீக்கப்பட்டால் சாதாரண முறைகளில் மீளப்பெற முடியாது.

5.        Spam
குறிப்பிட்ட மின்னஞ்சல் கணக்குக்கு முன்பின் அறிமுகமில்லா மின்னஞ்சல் முகவரிகளிடமிருந்து அல்லது சந்தேகத்துகிடமான முகவரிகளில் இருந்து வரும் மின்னஞ்சல்களை சேமிக்கும் கோப்புறை.

Comments

Popular posts from this blog

தரவுத்தளம் - பகுதி 01

கணினி கலைச் சொற்கள்

பொது உளச்சார்பு / நுண்ணறிவு & கிரகித்தல் தமிழ் புத்தகங்கள்