Tech news
மைக்ரோசாஃப்ட்டின் அடுத்த இயங்கு தளம் (Operating system)
மைக்ரோசாஃப்ட்
தனது அடுத்த இயங்கு தளத்தை (Operating system) அறிமுகப்படுத்தியிருக்கிறது.
மைக்ரோசாஃப்ட் வழக்கமான தனது முறையில் இருந்து மாறி முதல் முறையாக PC /
Mobile / Tablet support என்ற வசதியுடன் “விண்டோஸ் 8″ ஐ அறிமுகப்படுத்தியது
ஆனால், “விண்டோஸ் 7”
போல அனைவரிடமும் வரவேற்பை பெறவில்லை குறிப்பாக நிறுவனங்களிடையே ஆதரவே
இல்லை. எனவே அடுத்த வெளியீடை குறுகிய காலத்திலேயே அறிமுகப்படுத்த வேண்டிய
கட்டாயம் ஏற்பட்டது. “விஸ்டா” போல தோல்வி இல்லையென்றாலும் “விண்டோஸ் 7″ போல
வெற்றி இல்லை. அதோடு இதில் ஸ்டார்ட் பட்டன், Command prompt போன்றவை இல்லை
இதுவும் பெரிய குறையாக கருதப்பட்டது.
இந்த நிலையில் புதிய பதிப்பு
வெளியிடப்போவதாக மைக்ரோசாஃப்ட் கூறியதும் பலரும் இதன் அடுத்த பெயர்
“விண்டோஸ் 9″ என்று கூறத் தொடங்கி இருந்தார்கள் ஆனால், மாறாக மைக்ரோசாஃப்ட்
“விண்டோஸ் 10″ என்று அறிவித்து இருக்கிறது. ஏன் விண்டோஸ் 9 இல்லை? என்று
அனைவருமே குழம்பினார்கள். இதற்குக் காரணமாக விண்டோஸ் 8 ன் மீது இருக்கும்
ஒரு வெறுப்பை இது போல தள்ளி வைத்து தூரப்படுத்துகிறது மைக்ரோசாஃப்ட் என்று
கூறப்படுகிறது. அதோடு புதிய வெளியீட்டில் விடுபட்ட ஸ்டார்ட் பட்டன்,
command prompt போன்றவை திரும்ப கொண்டு வந்து இருக்கிறது. 2015 ல் தான்
“விண்டோஸ் 10″ அனைவருக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள்
நிறுவனம் கொஞ்ச நாட்கள் முன்பு தனது புதிய வெளியீடான ஆப்பிள் 6 மற்றும் 6
Plus வெளியிட்டது. வெளியிட்ட வேகத்தில் மிகப்பெரிய சாதனையை விற்பனையில்
நிகழ்த்தியது. இதில் ஆப்பிள் 6 Plus வளைவதாக குற்றச்சாட்டு எழுந்து ஆப்பிள்
நிறுவனத்திற்கு பெரும் தலைவலியாக ஆனது. இதோடு வெளியிட்ட இயங்கு தளம் iOS 8
ல் சில குறைகள் ஏற்பட்டு கடும் குற்றச்சாட்டை எதிர்கொண்டது. உடனே அடுத்த
வெளியீட்டை விட்டு சரி செய்தாலும் வளையும் பிரச்சனையை இணையத்தில் பலரும்
கிண்டல் செய்து கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக போட்டி ரசிகர்களான
Android ரசிகர்கள் இதை ஒரு வழி ஆக்கிக்கொண்டு இருக்கின்றனர்.
இரு பசங்க ஆப்பிள் நிறுவனத்தில் Display
க்கு வைத்து இருந்த சாதனத்தை வளைத்து சர்ச்சையை ஏற்படுத்தி விட்டார்கள்.
இதை YouTube ல் ஏற்றி பின்னர் பெரிய பிரச்சனை ஆனவுடன் நீக்கி விட்டார்கள்.
YouTube ல் சர்ச்சையான ஒரு காணொளியை நீங்கள் ஏற்றி விட்டால் முடிந்தது,
அவ்வளவு தான் உடனே எவராவது அதை தரவிறக்கம் செய்து மற்ற கணக்குகளில்
தரவேற்றம் செய்து விடுவார்கள். இந்த பசங்க பயந்து அதை நீக்கினாலும் மற்ற
கணக்குகளில் பரவி விட்டது. எனவே YouTube ல் எதையும் ஏற்றும் முன்பு அது
சர்ச்சையானது என்றால் ஒரு முறைக்கு நான்கு முறை யோசிக்க வேண்டும்.
ஆப்பிள் விலை மீது குற்றச்சாட்டுகள்
கூறப்பட்டாலும் அதன் தரம் மற்ற சாதனங்களை விட சிறப்பாகவே இருக்கிறது.
இதிலும் சில பிரச்சனைகள் இருக்கலாம் ஆனால், ஒப்பீட்டளவில் இதன் தரம்
சிறப்பாகவே இருக்கிறது. கடந்த நான்கு வருடங்களாக (4 & 5 Model) இதைப்
பயன்படுத்தி வருகிறேன் ஆனால், ஒரு முறை கூட சாதனம் பழுதானதில்லை /
பிரச்சனையைக் கொடுத்தது இல்லை. நான்கு வருடத்திற்குப் பிறகு (iPhone 5) iOS
8 நிறுவியவுடன் சில நேரங்களில் Hang ஆனது ஆனால், ஆப்பிள் வெளியிட்ட அடுத்த
பதிப்பில் இந்தக் குறை சரிசெய்யப்பட்டது. இணையத்தில் ஆப்பிள் கடுமையாக
Android பயனாளர்களால் கிண்டலடிக்கப்பட்டாலும் அதன் தரத்தை இன்னும் மற்ற
நிறுவன சாதனங்கள் தொட முடியவில்லை குறிப்பாக இதற்கு இருக்கும் மறுவிற்பனை
மதிப்பு. ஆப்பிள் புதிய வசதிகளை கொடுக்க தாமதம் செய்தாலும், ரசிகர்களை
அதிகப்படுத்திக்கொண்டே தான் செல்கிறது.
கூகுள்
தனது Chrome-book என்ற மடிக்கணினியை பிரபலப்படுத்தி வருகிறது. இன்னும்
அனைத்து பொதுமக்களிடையேயும் பிரபலமாகவில்லை என்றாலும் வளர்ந்த நாடுகளில்
பள்ளிகளில் இது பிரபலமாகத் துவங்கியுள்ளது. தற்போது பள்ளிகளில்
மாணவர்களுக்கு கொடுக்கப்படும் கணக்குகளில் Unlimited storage வசதியை
அறிமுகப்படுத்தியுள்ளது. “Chrome-book” Cloud முறையில் இயங்கும் ஒரு
இயங்குதளம் என்பதை அறிந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
சீனாவின்
கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் ஜனநாயகம் வேண்டி இளையோர்கள்
போராடி வருகிறார்கள் (தற்போது போராட்டம் வலுவிழந்து விட்டது). சீனா
எதற்கும் அசைந்து கொடுக்காமல் இருக்கிறது. இந்தப் போராட்டத்தை தவிர்க்கும்
விதமாக இந்தப் போராட்டத்தை படங்களாக Instagram
ல் பகிர்கிறார்கள் என்று இதை தற்காலிகமாக தடை செய்தது. அதோடு இது குறித்து
யாஹூ செய்தி வெளியிட்டது என்று இதற்கும் தடை விதித்தது. ஏற்கனவே இங்கே
கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவை இல்லை இப்படியே சென்றால் சீனா மக்கள்
மற்ற நாட்டினருடன் தொடர்பு கொள்வதே சிரமம் என்றாகி விடும். மைக்ரோசாஃப்ட்
நிறுவனத்தின் சில சுட்டிகள் (லிங்க்) கூட சில நேரங்களில் வேலை செய்வதில்லை.
நான் எங்கள் அலுவலக சீன கிளையில் உள்ளவர்களுடன் பணி புரிய நேரும் போது
இந்தப் பிரச்சனைகளை எதிர்கொள்கிறேன்.
மைக்ரோசாஃப்ட்
நிறுவனம் தனது Messenger சேவையான MSN Messenger / Live Messenger சேவையை
வருகிற அக்டோபர் 31 ம் தேதியோடு கடைசி நாடாக சீனாவில் நிறுத்துகிறது. Skype
நிறுவனத்தை வாங்கி அதை அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தத் தொடங்கி விட்டதால்
பழைய சேவையை மூட முடிவு செய்து விட்டது. 15 வருட சேவை நிறைவு பெறுகிறது.
-நன்றி
Comments