IT Tips 04
கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள் ---------------------------------------------------------------- கடந்த சில மாதங்களுக்கு முன்னர், எனது கணினியைத் துவக்குவதற்கு 10 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டி இருந்தது. பின் சில நெறிமுறைகளைப் பின்பற்றிய பிறகு ஒரே நிமிடத்துக்குள்ளாகவே Start ஆகிவிடுகிறது. 1. உங்கள் கணினியின் RAM எனப்படும் Random Access Memoryன் அளவை அதிகப்படுத்தவும். ஒரு சாதாரண கணினிக்கு 1GB போதுமானது. அதன் நினைவகத்தின் அளவை அதிகரிக்க அதிகரிக்க வேகமும் அதிகரிக்கும். இப்போது RAM ன் விலை மிகவும் மலிவுதான். 2. கணினியில் ஏற்கனவே நிறுவியிருக்கக்கூடிய தேவையற்ற மென்பொருட்களை நீக்கிவிடுங்கள். புதிதாகக் கணினி வாங்கியிருந்தால் கூட அத்துடன் ஏராளமான தேவையற்ற மென்பொருட்களையும் நிறுவி இருப்பார்கள். அவற்றில் சில மென்பொருட்கள் மட்டுமே நமக்குப் பயன்படும். மீதி அனைத்தையும் நிராகரித்து நீக்கிவிடவும். பழைய கணினியிலும் தேவையற்ற மென்பொருட்கள் இருப்பின் அனைத்தையும் நீக்கிவிடவும். அவற்றிற்குரிய Copy இருந்தால் அதை மட்டும் CD / DVD ல் ஏற்றி burn செய்துகொள்ளவும். 3. FireFox, Chrome, IE என ஒ...